காஷ்மீர் பற்றி பேசிய பாக்., பிரதமர்… இந்தியா கண்டனம்

புதுடில்லி:
சிறப்பு பாதை அமைக்கும் விழாவை பாகிஸ்தான் அரசியலாக்கியுள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.

கர்தார்பூர் சிறப்பு பாதை அமைக்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் குறித்து பேசினார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. தேவையில்லாமல், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேசியுள்ளார். சிறப்பு பாதை அமைக்கும் விழாவை பாகிஸ்தான் அரசியலாக்கியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!