கிகி சவால்… வயலில் ஆடிய சகோதரர்கள்… வைரலாகும் வீடியோ

ஐதராபாத்:
செம.. செம… என்று கிகி சவாலை வயலில் ஆடி அட்டகாசம் செய்துள்ளனர் சகோதர்கள்.

கிகி சவாலை, தெலுங்கானாவை சேர்ந்த சகோதரர்கள் வயலில் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரில் இருந்து நடுரோட்டில் இறங்கி இளைஞர்கள், இளைஞிகள் நடனமாடுவதற்கு எதிராக போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் சிலர் காயமடைந்தும், இறந்தும் போயுள்ளனர். இருப்பினும், பலர் காரில் இருந்து இறங்கி நடனமாடி சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த சகோதரர்கள் இந்த சவாலை வித்தியாசமான முறையில் செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த லம்பாடிபல்லி கிராமத்தை கீலா அனில்குமார்(24) மற்றும் அவரது சகோதரர் பிலி திருப்பதி(28) இவர்கள் இரண்டு மாடுகளை வயலில் உழ துவங்குகின்றனர்.

மாடுகள் உழ துவங்கும் போதே, இருவரும், ‘இன்மை பீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த காட்சியை, ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். தொடர்ந்து இது செம வைரலாகி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!