கிடுக்கிப்பிடி போடுது தேர்தல் ஆணையம்… அதிரடி சரவெடிதான்!

புதுடில்லி:
ரூ.10 ஆயிரம் மட்டும்தான் ரொக்கமாக செலவழிக்கலாம்… செலவழிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்கு நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே வேட்பாளர்கள் ரொக்கமாக செலவழிக்கலாம் என தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்தலில் அதிகளவு பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில், வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்துக்காக செலவிட அனுமதிக்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக தேர்தல் கமிஷன் குறைத்து உள்ளது.

இந்த உத்தரவு, இம்மாதம், 12 முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதேபோல், தனிநபர் அல்லது நிறுவனத்திடம் இருந்தும் ரூ.10,000க்கு அதிகமாக நன்கொடையோ அல்லது கடனோ வேட்பாளர்கள் பெறக் கூடாது என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!