கிண்டலுக்குள்ளான டிரம்ப்….தேசிய கொடியின் நிறத்தை மாறி வரைந்ததன் விளைவு

அமெரிக்காவில் குழந்தைகளுடன் சேர்ந்து தேசிய கோடி வரைந்த ட்ரம்ப் அதற்கு தவறான வண்ணமிட்டு எக்குத்தப்பாக ஊடகங்களால் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலினியா ட்ரம்ப் ஆகியோர் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். அங்கு குழந்தைகள் தேசிய கொடிகளை நோட்டுகளில் வரைந்து கொண்டு இருந்தனர். அவர்களோடு சற்று நேரம் உரையாடிய ட்ரம்ப், அவர்கள் வரைந்த தேசிய கொடிக்கு வண்ணம் கொடுத்தார்.

சிவப்பு கோடுக்கு கீழே வெள்ளை நிறம் இருக்க வேண்டிய இடத்தில், அவர் நீல நிற வண்ணத்தை கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, நெட்டிசன்களின் கிண்டலுக்கு ட்ரம்ப் உள்ளாகியுள்ளார். அமெரிக்க ஊடகங்களும் அவரை விமர்சித்து வருகின்றன. வாரம் இரு முறையாவது இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வது ட்ரம்புக்கு வாடிக்கை என அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய கொடியில் 7 சிவப்பு கோடுகளும் 6 வெள்ளை கோடுகளும் என மொத்தம் 13 கோடுகள் இருக்கும். ஐக்கிய அமெரிக்க தேசம் உருவானபோது 13 மகாணங்களை இந்த 13 கோடுகள் குறிக்கின்றன. மேலும், இடது ஓரத்தில் நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். இது, அமெரிக்காவில் தற்போது உள்ள 50 மாநிலங்களை குறிக்கக் கூடியது ஆகும்.

Sharing is caring!