கின்னஸ் சாதனை படைத்துள்ள தாமரை வடிவ வைர மோதிரம்

கின்னஸ் சாதனை படைத்துள்ளது தாமரை வடிவ வைர மோதிரம் என்று தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள், நீர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு 6,690 வைர கற்களை கொண்டு தாமரை வடிவ மோதிரத்தை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள் விஷால் அகர்வால் மற்றும் குஷ்பூ அகர்வால். எதையாவது சாதித்து பிரபலம் ஆகவேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து வந்தனர். தாங்கள் சார்ந்த ஆபரண துறையிலேயே சாதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக கின்னஸ் சாதனைகள் பற்றி விபரம் சேகரித்துள்ளனர். அதில் 18 கேரட் தங்கத்தை கொண்டு வைரம் பதித்த ரோஸ் மோதிரமே, கின்னஸ் சாதனையாக இருந்தது. இரைத முறியடித்து கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்று தீர்மானித்து இப்போது அதில் சாதித்துள்ளனர்.

இதையடுத்து நாட்டின் முக்கிய பிரச்னையாக திகழும் நீர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமரை வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்க திட்டமிட்டனர். 6 மாத உழைப்பின் பலனாக, 6,690 வைர கற்களை கொண்டு மோதிரத்தை உருவாக்கினர். 58 கிராம் அளவிற்கு இந்த மோதிரத்தின் எடை இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில், இது ரூ.28 கோடி மதிப்பு ஆகும். இந்த மோதிரம், தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!