கிராம மக்களை துரத்தி, துரத்தி தாக்கிய சிறுத்தை; 5 பேர் படுகாயம்

வேலூர்:
கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை கிராம மக்களை துரத்தி துரத்தி தாக்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம் ஊராட்சி நாகலேரி என்ற கிராமத்தில் பாரதி என்பவரின் வீட்டின் அருகேயுள்ள வாழை தோட்ட புதரில்  ஒரு விலங்கு புதரில் பதுங்கியிருந்தது. பாரதி அருகே சென்று பார்த்தபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்தது.

அவரை காப்பாற்ற சென்ற அவரது தங்கை அலமேலுவையும் சிறுத்தை தாக்கியது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் பதுங்கியிருந்த சிறுத்தையை கல்வீசி தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த
சிறுத்தை அவர்களை துரத்தியது. இதனால் அனைவரும் தலை தெறிக்க ஓடினர்.

விடாமல் துரத்திய சிறுத்தை தாக்கியதில் சந்தோஷ் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கரும்புத்  தோட்டத்தில் சிறுத்தையை பதுங்கிக் கொண்டது. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!