கிருஷ்ணா நீரை பெற குழு அமைப்பு

சென்னை:
கிருஷ்ணா நீரை பெற குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும் வழங்க வேண்டிய, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு முறையாக வழங்குவதில்லை. ஆண்டுதோறும் ஜூலையில் நீர் வழங்கும் தவணை காலம் துவங்குகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஆந்திராவிடம் இருந்து, கிருஷ்ணா நீரை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ஜெயராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விரைவில் ஆந்திரா சென்று அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!