கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நுழைந்த குறித்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியதுடன் 14 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிதாரியின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி காயமடைந்த நிலையில், தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவரது புகைப்படத்தை அந்நாட்டு பொலிஸார் நேற்று (13) வௌியிட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் சுமார் 27 குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!