கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் பராக் ஒபாமா

கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் சிறார் மருத்துவமனைக்குள் நுழைந்த அமெரிக்காவின் முன்னாள் அரசதலைவர் பராக் ஒபாமா அங்குள்ள சிறார்களுக்கு இன்பஅதிர்ச்சி வழங்கியுள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கு கிறிஸமஸ் பரிசுகளை வழங்கி அவர்களுடன் பாட்டு பாடி நடனமாடி மகிழ்ந்தார்.

இந்தநிகழ்ச்சியை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ஒபாமா இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இரண்டு குழந்தைகளின் தந்தையான தன்னால் இந்த சூழலை புரிந்துகொள்ள முடிவதாகவும் கூறியுள்ளார். ஒபாமாவின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Sharing is caring!