கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் : மிரண்டு போன இராணுவம்

தாயக பகுதியில் பல்வேறு இடங்களில் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் காட்சிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமையினால் சிறிலங்கா இராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக படங்கள் வரையப்பட்டுள்ளன.

ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்திற்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன.

ஜூலை ஐந்தாம் திகதியான இன்று தாயகத்திலும் புலத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பலத்த இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாயகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்தவர்கள் பற்றிய தகவல்களை இராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

Sharing is caring!