கிழக்கு உகண்டாவில் எல்கோன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்

கிழக்கு உகண்டாவில் எல்கோன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையை அடுத்தே கடந்த வியாழக்கிழமை மாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

“நிலச்சரிவால் பெரிய அறு ஒன்று தள்ளப்பட்டு கரைபுரண்டு ஓடியதால் சந்தை ஒன்றில் இருந்த மக்களே அதிகம் சிக்கியுள்ளனர். இந்த வெள்ளம் பலரையும் அடித்துச் சென்றது” என்று அனர்த்த முகாமை ஆணையாளர் மார்டின் ஓவோர் குறிப்பிட்டுள்ளார்.காணாமல்போன பலரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளை காட்டும் புகைப்படம் ஒன்றை உகண்டா செஞ்சிலுவை சங்கம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. “இந்த அனர்த்தத்தால் மிருகங்கள் மற்றும் மனிதர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று அந்த உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் கம்பாலாவில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தூரத்தில் கென்ய நாட்டு எல்லையை ஒட்டி இருக்கும் இந்தப் பிரதேசம் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்படும் பகுதியாகும். இதே பகுதியில் 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sharing is caring!