குஜராத் என்கவுன்டர் வழக்கில் வரும் 21ம் தேதி தீர்ப்பு

புதுடில்லி:
குஜராத் காந்தி நகரில் நடந்த என்கவுன்டர் சர்ச்சை வழக்கில் வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குஜராத் மாநிலம், காந்தி நகரில், கடந்த 2005ம் ஆண்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த, சொராபுதீன் ஷேக்கை, ‘என்கவுன்டரில்’ போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்டர் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், டிச., 21ல், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!