குடிநீரில் கலக்கப்பட்ட விஷம் : பாடசாலை மாணவிகள் 60 பேர் பாதிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் நகரில் ஒரு பள்ளியில் விஷம் கலந்த நீரைப் பருகிய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது பர்வான் நகர். இந்த நகரின் கிழக்குப் பகுதியில் ஜர்பியா பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு ஆற்றின் கால்வாயில் இருந்து குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்தக் குடிநீரப் பருகிய 100 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அத்துடன் அந்த குடிநீரை சோதனைக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது.

குடிநீரை சோதனை செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அதில் கடுமையன விஷம் கலந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள 100 மாணவிகளில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!