குடியுரிமை விண்ணப்பத்தில் எந்த வழக்கும் இல்ல… ஆண்டிகுவா அரசு தகவல்

புதுடில்லி:
குடியுரிமை கேட்ட விண்ணப்பத்தில் எந்த வழக்கும் இல்ல என்று ஆண்டிகுவா அரசு தெரிவித்துள்ளது. யாருக்கு இந்த குடியுரிமை தெரியுங்களா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சிக்கு, குடியுரிமை கேட்ட விண்ணப்பத்தில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என இந்திய அரசு தெரிவித்திருந்ததாக ஆண்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்தது தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் இருவரும் சிபிஐ வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதன் பிறகுதான், இவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மெகுல் சோக்சிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

மோசடி நடந்து பின்னர் நாட்டை விட்டு சென்ற மெகுல் சோக்சி கடந்த ஜனவரி 15ம் தேதி ஆண்டிகுவா குடிமகனாக பதிவு செய்து கொண்டார். இதனிடையே மெகுல் சோக்சிக்கு குடியுரிமை அளித்தது தொடர்பாக ஆண்டிகுவா அரசு, இந்திய அரசிடமிருந்தும், வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்தும் எங்களுக்கு வந்த ஆவணங்களில் அவர் மீதும் எந்தவழக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனாலேயே, அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நிரவ் மோடியை நாடு கடத்துவது குறித்து வெளியுறவு இணையமைச்சர் விகே சிங் கூறுகையில், நிரவ் மோடியை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மனுவை, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இங்கிலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவல் சிபிஐக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!