குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு

தஞ்சம் கோரிய குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மெக்ஸிக்கோ அறிவித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவினூடாக எல்லையைக் கடக்க முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அந்நாட்டு இராணுவத்தினர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், குடியேற்றவாசிகள் எல்லையைக் கடக்காமலிருக்க மெக்ஸிக்கோவும் தடைகளை விதித்துள்ளது.

மெக்ஸிக்கோவிடம் தஞ்சம் கோரிய குடியேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மெக்ஸிக்கோ அறிவித்துள்ளது.

Sharing is caring!