குடும்பத்தகராறு 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தந்தை

ஐதராபாத்:
குடும்பத் தகராறு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 3 ஆண் குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். வெங்கடேஷ் என்பவர் தனது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அமராவதி என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வெங்கடேசுடன் ஏற்பட்ட தகராறில் அமராவதி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். அவர்களை திருப்பி அழைத்து வரும் வழியில் வெங்கடேசுக்கும், அமராவதிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் 3 மகன்களையும் ஆற்றில் தூக்கி வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். ஆற்றில் மூழ்கி 3 குழந்தைகளும் இறந்து விட்டன. குழந்தைகளின் உடல்களை மீட்ட போலீசார், வெங்கடேசை தேடி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!