குடும்ப வரியால் அவதி… குடும்பம் குடும்பமாக வெளியேறும் இந்தியர்கள்

புதுடில்லி:
குடும்ப வரி என்று போட்டு குடும்பம், குடும்பமாக வெளியேற செய்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வரிகள் இல்லாத நாடு என கூறப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், கடந்த ஆண்டு குடும்ப வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கவும், சட்ட விரோதமாக வசிப்பவர்களை கண்டறிவதற்காகவும் இந்த வரி போடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒரு மாதத்திற்கு நபர் ஒருவருக்கு 200 ரியாலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி 2019 ஜூலையில் 300 சவுதி ரியால்களாகவும், 2020 ஜூலையில் 400 ரியால்களாகவும் உயர்த்தப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில், தற்போது வரை 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.5500 வரியாக பெறப்படுகிறது. இனி இது ரூ.11,000 ஆக உயரும்.

இதனால் மிக குறைந்த வருமானம் ஈட்டும் பல குடும்பங்கள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறி வருகின்றன. சவுதியில் வசித்த 1200 குடும்பங்களில் தற்போது 500 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகாவின் கடலோர பகுதிகளையும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆவர்.
வேலையிழந்த இவர்கள் தற்போது கேரளா மற்றும் கர்நாடக அரசுகளின் உதவிகளை நாடி உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று தெரிய வந்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!