குட்டி விமானங்கள் அடிக்கடி பறக்கும் சத்தம்… மக்கள் அச்சம்

குஜிலியம்பாறை:
குட்டி விமானங்கள் பறக்கும் சத்தம் தொடர்ந்து கேட்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குஜிலியம்பாறை மற்றும் வேடசந்துார் ஒன்றிய பகுதிகளில்அடிக்கடி குட்டி விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்பது தொடர்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து அடுத்தடுத்து இந்த சத்தம் கேட்டவாறு உள்ளது. திடீரென வெடிச் சத்தமும் அவ்வப்போது பலமாக கேட்கும்.

இதே போல் குஜிலியம்பாறை, லந்தகோட்டை, டி.கூடலுார் பகுதிகளில் மிகவும் தாழ்வாக விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்டது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வது போன்று கேட்ட சத்தம், மீண்டும் கல்வார்பட்டி, வேடசந்துார் பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வது போன்று கேட்டது.

இச்சத்தம் எதனால் ஏற்படுகிறது என தெரியாமல் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!