குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தான்… முதல்வர் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ்:
குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

பஞ்சாபில் உள்ள ஆசிரமத்தில் கூடியிருந்த மக்கள் மீது கையெறி குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாபின், அமிர்தசரஸ் அருகே உள்ள ஆதிவால் கிராமத்தில், சாமியார் நிராங்காரியின் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 18 ம் தேதி, 200க்கும் மேற்பட்ட மக்கள், பிரார்த்தனைக்காக கூடியிருந்தனர். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆசிரம வளாகத்துக்குள் புகுந்து கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோடினர்.

அந்த குண்டு வெடித்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த, 10 பேர் ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கையெறி குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறுகையில், கையெறி குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது. வீசப்பட்ட குண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை குண்டுகள் தான் காஷ்மீரிலும் ராணுவத்தினர் மீது வீசப்படுகிறது. முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். 2வது குற்றவாளியின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவனும் கைது செய்யப்படுவான் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!