குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம்

கலிபோர்னியாவில் புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வரும் 2045க்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குப்பைகள் மண்ணுக்கடியில் புதைந்து போகும் போது அது மக்கிப் போகிறது. அதை உரமாக பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் அதை எரிபொருளாக பயன்படுத்தும் முயற்சியில் உலகெங்கும் உள்ள பல நாடுகள் முயன்று வருகின்றன. இந்த நாடுகளில் கலிபோர்னியா முதல் இடத்தில் உள்ளது.

கலிபோர்னியா நாட்டின் மாபெரும் விஞ்ஞானியான பிரவுன் உலகெங்கும் பசுமை மயமாக்கும் திட்டத்தை வெகுவாக ஆதரிப்பவர். இவர் சமீபத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

அந்த தீர்மானத்தில் உலகெங்கும் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை குறைக்கும் நடவடிக்கையில் கலிபோர்னியா அனைத்து நாடுகளுக்கும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 2045 ஆம் வருடத்துக்குள் கலிபோர்னியாவில் புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sharing is caring!