குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
மழை… மழை… கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலில் கிழக்குத்திசை காற்று வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!