குரூப் 1 தேர்வில் முறைகேடு விசாரிக்க காலஅவகாசம்

சென்னை:
குரூப் 1 தேர்வில் முறைகேடு குறித்து விசாரிக்க அரசு கால அவகாசம் கேட்டதால் அதனை கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 74 விடைத்தாள்கள் தடயவியல் கணினி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவகாசம் வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டது.

இதையடுத்து விடைத்தாள் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 3 மாதம் அவகாசம் வழங்கியும். முழுமையான அறிக்கையை தயாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!