குறைக்க முடிவு… 1.5 லட்சம் பணியிடம்… இது ராணுவத்தில்…!

புதுடில்லி:
1.5 லட்சம் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதனால் மிச்சமாகும் தொகையில் ஆயுதங்கள் வாங்க போறாங்களாம்.

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 12.8 லட்சம் கோடியில், 83 சதவீதம் தினசரி செலவுக்கும், வீரர்கள் சம்பளத்திற்கு மட்டும் செலவாகிறது. இதில், ஓய்வூதிய தொகை சேராது. இதற்கு தனியாக பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மிச்சமிருக்கும் 17 சதவீத பணம் ரூ.26,826 கோடி மட்டும் ஆயுதங்கள் பராமரிக்கவும், ராணுவத்தை நவீனபடுத்தவும் செலவிடப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என ராணுவம் கருதுகிறது.

இதனால் 1.5 லட்சம் பணியிடங்களை குறைத்தால், ரூ.5 ஆயிரம் கோடி- ரூ.7 ஆயிரம் கோடி மிஞ்சும். இதன் மூலம் ஆயுதங்களை பராமரிக்கவும், புதியவை வாங்கவும் ரூ.31,826 கோடி முதல் ரூ.33, 826 கோடி வரை கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!