குறைந்துள்ளது… ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது

புதுடில்லி:
குறைந்துள்ளது… ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,637 கோடியாக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர் எண்ணிக்கை 69 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில், ரூ. 49ஆயிரத்து 726 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியோடு சேர்த்து, மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தைவிட 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!