“குறைந்து வருகிறது… கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது”
மூணாறு:
குறைந்து வருகிறது… குறைந்து வருகிறது… கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கேரளாவில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, ”என சிறைத்துறை டி.ஜி.பி., ஸ்ரீலேகா கூறினார்.
இடுக்கி மாவட்டம் முட்டத்தில் மாவட்ட சிறைச்சாலையை திறந்து வைத்து கேரள சிறைத்துறை டி.ஜி.பி.,ஸ்ரீலேகா கூறியதாவது:
கேரளா சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2016 ஜனவரி கணக்குப்படி, 8,020 பேர் இருந்தனர். அது தற்போது 7,890ஆக குறைந்துள்ளது. அதேபோல் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 3,880ல் இருந்து,3,400ஆக குறைந்தது.
மனப்பூர்வமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்த பங்கு போலீஸ் அதிகாரிகளை சேரும்.
மலம்புழா மற்றும் தவனுார் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய சிறைகள் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும். அதன்பிறகு மற்ற சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி