குறைந்த விலையில் 4 ஜி ஸ்மார்ட் போன்… ஜியோ செம திட்டம்

மும்பை:
குறைந்த விலையில் 4 ஜி வசதியுள்ள ஸ்மார்ட் போன் தயாரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறதாம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

குறைந்த விலையில், 4ஜி வசதியுடன் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் போனை தயாரிப்பது குறித்து நட்பு நிறுவனங்களுடன் பேசி வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து நிறுவன விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சுனில் தத் கூறியதாவது:

4ஜி வசதியுடன் ஸ்மார்ட் போன்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு வசதியாக, குறைந்த விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நட்பு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.

இதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள், தரமான இணைய அல்லது சேவை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதற்காக ஜியோ போனை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 கோடி ஸ்மார்ட்போன்களை தயாரிக்க, அமெரிக்காவை சேர்ந்த பிளெக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக, சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!