குறைய… குறைய… போதை ஏற்றி பணி செய்த அரசு டாக்டர்
கரூர்:
குறைய… குறைய… போதை ஏற்றிக் கொண்ட பணியாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டரின் செயலால் நோயாளிகள் அச்சமடைந்த சம்பவம் குளித்தலையில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் நல மருத்துவராக பாண்டியன் என்பவர் கடந்த சில வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த போது காலை முதலே போதையில் இருந்துள்ளார். போதை குறைய குறைய சரக்கு அடித்துக்கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இரவு முழுவதும் போதையில் தள்ளாடியபடி பணியில் இருந்த டாக்டர் பாண்டியன், நோயாளிகளுக்கு தாறுமாறாக ஊசி குத்தியுள்ளார்.
சில நோயாளிகளுக்கு ஊசி குத்தப்பட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பதற்றத்துடன் பார்த்தவாறு மருத்துவர் பாண்டியனிடம் கேட்டபோது உளறியடி பேசியுள்ளார். . நிற்க கூடமுடியாமல் திணறிய டாக்டர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கீழே படுத்துக்கொண்டே உளறியபடி இருந்ததை பார்த்த நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இரவில் அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் அச்சத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி