குற்றாலத்தில் குளிக்கத் தடை… வெள்ளப்பெருக்கால் தடை

கோவை:
தடை…தடை… அதிக வெள்ளப்பெருக்கால் கோவைக் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவைக் குற்றாலத்துக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறை 2-வது நாளாகத் தடைவிதித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யும் நிலையில் கோவை சிறுவாணியை ஒட்டிய மலைப்பகுதியிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

பாதுகாப்பு கருதி, கோவைக் குற்றாலத்துக்கு செல்லவும், அங்கு குளிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. கோவைக் குற்றாலத்துக்கு வரும் பயணிகள் சாடிவயல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!