குற்ற உணர்வு இல்லையா? நீதிபதிகள் கேள்வி

சென்னை:
மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்டங்களை செய்யாமல்,  ஆடம்பரமாக நினைவிடம் கட்டுகிறீர்கள். இது குறித்து குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட உங்களுக்கு இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குழந்தைகள் கடத்தல் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதை சத்தியநாராயணா, சேஷசாயி அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் மாநிலம் முழுக்க 3 குழந்தைகள் மையம் மட்டுமே அனுமதியின்றி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் அரசு சொல்வதை நம்புவது கடினம். மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்டங்களை செய்யாமல்,  ஆடம்பரமாக நினைவிடம் கட்டுகிறீர்கள். இது குறித்து குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட உங்களுக்கு இல்லையா? என்று கேட்டனர்.

மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் குறித்து சட்டப்பணிகள் குழு, போலீசார், அரசு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!