குழந்தைகளை விற்பனை செய்த கருணை இல்லம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தையை விற்றதாக புகார் எழுந்துள்ள கருணை இல்லத்தின் மீது விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிழக்கு ஜெயில் சாலையில் ஒரு கருணை இல்லம் உள்ளது. நிர்மல் ஹ்ரைடே என பெயரிடப்பட்டுள்ள இந்த கருணை இல்லம் கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி நிர்வாகத்தில் நடைபெறுகிறது. இதை நிறுவியவர் பிரபல சமூக சேவகியான மறைந்த அன்னை தெரசா ஆவார்,

இந்த கருணை இல்லத்தில் ஆதரவற்ற கன்னியாஸ்திரி சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த இல்லப் பணியாளர் அனிமா இந்துவர் என்னும் மற்றொரு கன்னியாஸ்திரி அதை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை உ.பி. மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் வெளியே வந்ததும் நாடே பரபரப்பில் ஆழ்ந்தது.

மேலும் இது போல 22 குழந்தைகள் விற்கப்பட்ட தகவலும் வெளியா வந்துள்ளது.

இதை ஒட்டி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை ஜார்க்கண்ட் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்த உள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 15க்குள் அளிக்க வேண்டும் என முதல்வர் கூறி உள்ளார். அத்துடன் சட்ட விரோதமாக குழந்தைகள விற்கும் அனைத்து இல்லங்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த கருணை இல்லத்தை நடத்தி வரும் மிஷனரிஸ் ஆஃப் சாரிடி இது குறித்து மிகவும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கையில், “இந்த சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்வு இந்த அனாதை இல்லம் தொடங்கிய காரணம் மற்றும் தொடங்கியவருக்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நிர்வாகம் கடும் தண்டனை அளிக்கும்” எனக் கூறி உள்ளது.

Sharing is caring!