குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகுள் டூடுளை வெளியிட்டுள்ளது

குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகுள் டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பை மாணவி வரைந்த ஓவியம் தான் இன்று டூடுளாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது.

google

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள் ஃபார் கூகுள்’ என்ற போட்டியை நடத்தியது.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றியடைந்த மும்பை மாணவி வரைந்த டூடுள்தான் இன்றைய தினத்தில் கூகுளின் டூடுளாக வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!