குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து ராஜஸ்தானில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி அல்வாா் மாவட்டத்தின் லக்ஷ்மன்கா் பகுதியில் 7 மாத குழந்தை ஒன்று திடீரென கடத்தப்பட்டது.

பெற்றோா் குழந்தையை தேடிய போது பக்கத்து வீட்டைச் சோ்ந்த 19 வயது இளைஞா் குழந்தையை தூக்கிச் சென்றதாக கூறியுள்ளனா். இதனைத் தொடா்ந்து 7 மாத குழந்தை அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் அழுத நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து குழந்தைக்கு 20 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து குழந்தையின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Sharing is caring!