குழிக்குள் சிக்கிய டிப்பர் லாரி… மாணவ, மாணவிகள் அவதி

கும்பகோணம்:
குழிக்குள் சிக்கிய டிப்பர் லாரியால் மாணவ, மாணவிகள் அவதிடைந்தனர்.

கும்பகோணத்தில் சூறைகாற்றுடன் மழை பெய்தது. அப்போது குழாய் பதித்த குழியில் டிப்பர் லாரி சிக்கியதால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கும்பகோணத்தில் மத்திய அரசின் அம்ருதிட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதையொட்டி பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த குழிகளில் வாகனங்கள் அடிக்கடி சிக்கி வருகின்றன.

கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ரோட்டில் ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரி குடிநீர் குழாய்க்கு தோண்டிய குழியில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் குடிநீர்குழாய் பாதிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது.

அந்த வழியாக ஜல்லி ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியின் 2 டயர்கள் சேற்றில் சிக்கி புதைந்ததால் லாரி நடு ரோட்டில் நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் நடந்தே சென்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!