கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ:
இவர்தான்… இவர்தான் அதிகம் தேடப்பட்ட முதல்வர் என்று கூகுள் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, ‘இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்’ என, ‘கூகுள்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் குறித்து, அந்நிறுவனம், விபரங்களை வெளியிட்டு வருகிறது. நாட்டில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்களில், அதிகம் தேடப்பட்ட நபராக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல்களுக்கான பிரசாரத்தின் முக்கிய பேச்சாளராக, யோகி ஆதித்யநாத் இடம் பெறுவார் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இதற்கு பின், ஆதித்யநாத்தை, இணையத்தில் தேடியவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக, கூகுள் அறிவித்துள்ளது. உ.பி., முதல்வர் இணையத்தில் முன்னணி வகிப்பது, பா.ஜ.,வினர் இடையே, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!