கூடாது… கூடாது… அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த அரசு

அகர்தலா:
கூடாது… கூடாது… இதெல்லாம் அணியக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கு தெரியுங்களா?

‘அரசு அதிகாரிகள் பணி நேரங்களில், ‘டி – ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ்’ போன்றவற்றை அணியக் கூடாது’ என, திரிபுரா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில முதன்மை செயலர் சுஷில் குமார்  வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

பணி நேரத்தில், அரசு அதிகாரிகள், டி – ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணிவது தொடர்பாக புகார்கள் வந்தன. அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும், ஏராளமான அரசு அதிகாரிகள், மொபைல் போன்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் புகார்கள் வந்தன.

இனி வரும் காலங்களில், அரசு அதிகாரிகள் பணி நேரத்தில், டி – ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது. ஆலோசனைக் கூட்டங்களின் போது, மொபைல் போன்களை அதிகாரிகள், ‘சுவிட்ச் ஆப்’ செய்ய வேண்டும்; இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!