கூடுதல் இருக்கைகள்… பெண்களுக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு

புதுடில்லி:
ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது அதிக தூரம் பயணிக்கும் பெண்கள் ரயில்களில் கூடுதல் இருக்கைகள் இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது. பெண்களுக்காக ஒதுக்கப்படும் தனி கேரேஜிலும் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது தவிக்கின்றனர்.

இதனால் ராஜ்தானி, துரந்தோ உட்பட, ‘ஏசி’ வசதி உள்ள ரயில்களில், பெண்களுக்கு கூடுதலாக, ஆறு படுக்கைகளை ஒதுக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!