கூடுதல் விமானங்கள் இயக்கணும்… பிரதமருக்கு காங்., தலைவர் கடிதம்

புதுடில்லி:
கூடுதல் விமானங்களை இயக்கணும்… இயக்கணும்… என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் கோட்லா நகருக்கு கூடுதலாக விமானங்களை இயக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோடா பகுதியில் உள்ள பயிற்சி மையங்களில் பல மாநிலங்களில் இருந்தும் 1.5 லட்சம் மாணவர்கள் வந்து தங்கி படிக்கின்றனர். போதுமான விமானங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய விமான நிலையம் கட்டி கூடுதலாக விமானங்களை இயக்க வேண்டும். கோடா பகுதி மக்களும் வளர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!