கூட்டணி இல்லை…திராவிட, இந்திய கட்சிகளுடன் இல்லை….சீமான்

திராவிட கட்சி, இந்திய கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி கிடையாது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கோவிலில் பணிபுரியும் குருக்களுக்கு தெரியாமல் சிலை திருட்டுபோகுமா? காவல்துறையின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. யாரையோ காப்பாற்றுவதற்கு தமிழக அரசு இவ்வாறு வேலை செய்கிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும்.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் தேச துரோக வழக்கு போடப்படுகிறது. மக்களை மறைமுகமாக அச்சுறுத்தவும், மிரட்டவும் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. சிலைக் கடத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதால் அதனை மறைக்க சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுகின்றது. எந்த தவரும் இல்லை என்றால் சிலை கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும தலைவர் வேனு சீனிவாசன் முன் ஜாமீன் பெற வேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் வருகைக்கு பின் காவல்துறையை திரும்பப்பெற்றது தவறு. அது திட்டமிட்ட செயல்” என கூறினார்.

Sharing is caring!