கூட்டணி குறித்து பேசுவாரா? அமித்ஷா சென்னை வருகை!

சென்னை:
கூட்டணி குறித்து பேசுவாரா? பேசுவாரா என்று தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜவும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டனி விஷயத்தில் இரு கட்சிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜ நிலையை கள ஆய்வு செய்து வரும் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகை தருகிறார்.

தமிழகத்தில் பாஜ பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதை எப்படி ஓட்டாக மாற்றுவது என்பது குறித்து பாஜ தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்.

சென்னை வரும் அமித்ஷாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் வரவேற்கின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!