கேட் தேர்வு அட்டவணை வெளியீடு… பிப்.2ம் தேதி தொடங்குகிறது!

புதுடில்லி:
தேசிய அளவிலான கேட் தேர்வின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் கழகமும், 7 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து தேசிய அளவிலான கேட்  தேர்வை நடத்துகின்றன. ஐஐஎஸ்சி, ஐஐடி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் எம்.டெக்., எம்.இ. மற்றும் பி.ஹெச்.டி. போன்ற மேற்படிப்புகளில் சேர இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல மேற்படிப்புகளில் சேர தகுதி பெறுவர். நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் அரசு நிதி உதவியுடன் சேர முடியும்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு தேர்வுக்குரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 2, 3, 9 மற்றும் 10ம் தேதிகளில் தேர்வு நடக்கிறது. இதற்கு முன்னதாக வரும் ஜனவரி 4ம் தேதி அட்மிட் கார்டு வழங்கப்படுகிறது. மார்ச் 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!