கேதார்நாத் கோயிலுக்கு இன்று வருகிறார் பிரதமர் மோடி

டேராடூன்:
பிரதமர் மோடி இன்று கேதார்நாத் வருகிறார் ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பலத்த பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், கேதார்நாத்தை மறுசீரமைப்புக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து உத்தரகாண்ட், மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் கூறுகையில், பிரதமர் மோடி இன்று கேதார்நாத் வருகிறார். அங்கு கோயிலில் 2 மணி நேரம் தங்கியிருப்பார். அப்போது அங்கு நடைபெற்று வரும் மறுகட்டமைப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!