கேரளாவில் தொடர்ந்து கனமழை… மண்சரிவு… மக்கள் அச்சம்

திருவனந்தபுரம்:
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் தேவிகுளம், உடும்பன்சோலை தாலுகா பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வயலாறு பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இரிட்டி, கண்ணூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!