கேரளாவில் வரலாறு காணாத பேரழிவு…ஐ.நா செயலாளர் வருத்தம் தெரிவிப்பு

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு பேரழிவால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக, அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்தார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா கோரியுள்ளதா? என்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், இயற்கை பேரிடர்களை கையாள இந்தியாவிடம் போதுமான வசதிகள் உள்ளதாகவும், அதனால், எங்களிடம் எந்த உதவியும்கோரப்படவில்லை என்றும் கூறினார்.

கேரளாவில் மே மாதம் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் மழை வெளுத்து வாங்குகிறது. அங்கு 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலமே வெள்ளநீரில் மிதக்கிறது. மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறந்துவிடப்பட்டுள்ளன தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது.

இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கிறது. தற்போதைய சூழலில் எட்டாயிரம் கோடி சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக முப்படைஇலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் பணி செய்கின்றனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ அண்டை மாநிலங்கள் பலவும் முன்வந்துள்ளது.

Sharing is caring!