கேரளாவை மிரட்டும் கனமழை… மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்து வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி உட்பட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 5 நாட்கள் வரை இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைக்கு கடந்த 9ம் தேதி முதல் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 42 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் இன்றும் (17ம் தேதி) பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!