கேரளா மறு சீரமைப்புக்கு கை கோருங்கள்… முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

கொச்சி:
ஒன்று சேரணும்… கேரளா மறுசீரமைப்புக்கு உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் ஒன்று சேரணும் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்தை மறுசீரமைப்பதற்காக உலகம் முழுவதிலும் வாழும் மலையாள மக்கள் ஒன்று சேர வேண்டும். மலையாள மக்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்க வேண்டும்.

இயற்கை பேரிடரால் உருக்குலைந்த கேரளாவை புதிதாக கட்டமைக்க மலையாள மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமது பலத்தை உணர வேண்டிய நேரம் இது. ஒரு மாத சம்பளத்தை வழங்குவது என்பது கடினமான விஷயம் தான்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் கேரளா மக்கள் முதலில் 3 நாட்கள் சம்பளத்தை வழங்க முடியும். அடுத்த 10 மாதங்களுக்கு மீதமுள்ள தொகையை நிதியாக அளிக்க முடியும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!