கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்வடைந்துள்ளதால், உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அங்கு 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை (18) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஓணம் கொண்டாட்டத்தையும் கேரள அரசு இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இன்னும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், மழையின் தாக்கமும் வெள்ளத்தின் தாக்கமும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Sharing is caring!