கேலம் என்ற புயற்காற்று கடுமையாக வீசிய நேரத்தில் போயிங் விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானி

பிரிட்டனில் கேலம் என்ற புயற்காற்று கடுமையாக வீசிய நேரத்தில் போயிங் விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானிக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

பிரிஸ்டல் விமான நிலையத்தின் ஓடுபாதையின் குறுக்காக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்த சமயம், விமானத்தை நேராக கொண்டு சென்று தரையிறக்க முடியாமல் வேகமாக காற்று வீசியது. விமானம் தாறுமாறாக ஆடியது.

இதனை உணர்ந்த விமானி மிகக்கவனமாக காற்று எந்தப்பக்கத்திலிருந்து வீசுகிறதோ அந்தப் பக்கம் நோக்கி விமானத்தின் முன் பக்கம் (மூக்கு) இருக்குமாறு வைத்து பக்கவாட்டிலேயே மேலேயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன் வேயில் தரையிறக்கினார்.

இந்த உத்தியைக் கடைபிடிக்கவில்லை என்றால், 40நாட்டிக்கல் மைல் வேகத்தில் வீசிக் கொண்டிருந்த புயல் காற்றில் விமானம் விபத்துக்குள்ளாயிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிய சம்பவம் கடந்த அக்டோபர் 12ம் தேதி நடந்தது. கடுமையாக புயல் வீசியபோதும் மிகவும் துல்லியமாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

“பிரமிக்கத்தக்க லேண்டிங், பிரில்லியண்ட், அற்புதம் என்று பலவாறாக விமானிக்கு பாராட்டு குவிகிறது.

Sharing is caring!