கே.எப்.சி மூடப்பட்டது. தரமற்ற எண்ணை பயன்பாடு காரணம்

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள துரித உணவு கடையான கே.எப்.சி யின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நசரத்பேட்டையில் இயங்கி வந்த கே.எப்.சியில் உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தபட்ட எண்ணையில் தரமற்ற எண்ணை பயன்படுத்தி வந்ததால் ஆய்வு செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓராண்டு ஆண்டு நிறைவடைந்தும் அபராத தொகையை செலுத்த தவறியதால் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை அலுவலர், மருத்துவர் கவிகுமார் தலைமையிலான அதிகாரிகள் கே.எப்.சி உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ள நிலையில் உணவகம் மீண்டும் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என கே.எப்.சி ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Sharing is caring!