கைதான சிபிஐ சிறப்பு இயக்குனரின் ஜாமீன் மனு இன்று விசாரணை

புதுடில்லி:
லஞ்ச வழக்கில் கைதான சிபிஐ சிறப்பு இயக்குனரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.

சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ., துணை கமிஷனர், தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று, இந்த வழக்கில், ஜாமின் கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!