கொங்கோ குடியரசில் எபோலா தாக்கம்

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா தாக்கத்தினால், அண்மையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் அரைவாசிப் பங்கினர், பெனி நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தேசிய சுகாதார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ஆயுததாரிகள் தொடர்ச்சியாக வைத்தியக் குழுவினருக்கு இடையூறு விளைவித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஒலி இழுங்கா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது 291 பேர் பாதிகப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொங்கோ குடியரசு பல வருட காலமாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் கிளர்ச்சிக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!